Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் நாட்டின் மானத்தைக் கொஞ்சம் காப்பாற்றுங்கள்- மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (19:04 IST)
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விமர்சிக்கும் தலைவர்களுக்கு கொஞ்சம் அறிவு வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளதாக மத்திய பாஜக அரசு தெரிவித்திருந்தது. இதுகுறித்து,  எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.

ALSO READ: 95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே? எம்பி தாகூர் விடியோ வெளியீடு

இந்த நிலையில், நேற்று, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு  ரூ.1,264 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கான கட்டுமானப் பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாகவும், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமான மாற்ற ரூ.550 கோடி  மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் கூறியிருந்தார்.

பாஜக தலைவர் ஜேபி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 95% முடிந்துவிட்டதாக கூறிய நிலையில், எய்ம்ஸ் கட்டுமான இடத்தைப் பார்வையிட்ட  மதுரை எம்பி சு.வெங்கடேஷ் மற்றும் விருது நகர் எம்பி தாகூர் 95% பணிகள் முடிந்த எய்ம்ஸ் எங்கே ?    நீங்க சொன்ன இடத்தை ஒரு மணி நேரம் தேடினோம் என்று பேசி ஒரு  வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், பாஜக முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன்,  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து விமர்சித்து வரும் அரசியல் தலைவர்களுக்கு  கொஞ்சம் அறிவு வேண்டும். 95% ஆரம்பக்கட்ட பணிகள்தான் நிறைவு பெற்தாக ஜேபி நட்டா கூறினாரே தவிர, கட்டுமானப் பணிகள் பற்றி அவர் குறிப்பிடவில்லை.

வெற்றி விளம்பரத்திற்காக எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்திற்குச் சென்று புகைப்படம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். தமிழ் நாட்டில் மானத்தைக் கொஞ்சம் தயவு செய்து காப்பாற்றுங்கள் என்று தெரிவித்துள்ளார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு எடுக்கும் முடிவை பின்பற்றுவோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு..

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு வரி கிடையாதா?

இன்று ஒரே நாளில் 560 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லுமா?

நேற்றைய திடீர் சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழை இலங்கைக்கு மாறியது ஏன்? இதுதான் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments