Publish Date: Wed, 13 Oct 2021 (15:33 IST)
Updated Date: Wed, 13 Oct 2021 (15:36 IST)
வருகிற வியாழன், வெள்ளி அரசு பொது விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.
நாளை முதல் ஆயுத பூஜை விஜயதசமி என 14 மற்றும் 15ம் தேதி அரசு விடுமுறைகளாக உள்ளன. பின்னர் சனிக்கிழமை தாண்டி ஞாயிற்றுக்கிழமையும் வார விடுமுறை நாளாகும். இந்நிலையில் நடுவே சனிக்கிழமை மட்டும் பள்ளிகள் நடத்துவதற்கு பதிலாக விடுமுறை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் சங்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் 14 மற்றும் 15ம் தேதிகளை தொடர்ந்து 16ம் தேதி சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 14 முதல் 17 வரை நான்கு நாட்கள் பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.