Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது!

Advertiesment
சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது!
, திங்கள், 11 அக்டோபர் 2021 (10:37 IST)
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் உறுப்பினரான யுடியூபர் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூடியூபில் பிரபலமான இருப்பவர் சாட்டை துரைமுருகன். இவர் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். அடிக்கடி தலைவர்களைப் பற்றி தவறாக பேசி கட்சியில் இருந்து நீக்கப்படுவதும், பின்னர் சேர்த்துக் கொள்ளப்படுவதுமாக இருந்துவந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கார் உதிரிபாக கடைக்காரரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது துரைமுருகன் திருச்சியைச் சேர்ந்த யூடியூபர் சாட்டை முருகன் பல ஆவேசமான வீடியோக்களை தனது யூடியூபில் பதிவு செய்து வருபவர். இவர் திருச்சியில் உள்ள கார் உதிரி பாக கடைக்காரரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த புகாரில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மலைகள் அகற்றம் தொடர்பாக நடந்த நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வரை தரம்தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து அவர் மீது கண்டனங்கள் எழுந்த நிலையில் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 25 ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனைவி மேல் சந்தேகம்… குழந்தைகளைக் கிணற்றில் வீசி கொன்ற கொடூர கணவன்!