Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகிழ்மதி பெயரில் இயக்கம் தொடங்கிய சத்யராஜ் மகள்

Advertiesment
மகிழ்மதி பெயரில் இயக்கம் தொடங்கிய சத்யராஜ் மகள்
, ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (16:10 IST)
தமிழ்‌ நாட்டில்‌ குறைந்த வருமானத்தில்‌ வாழ்பவர்களின்‌ ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில்‌ ஒரு இயக்கம்‌ ஆரம்பிக்க உள்ளேன்‌” என்று நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது ‘மகிழ்மதி இயக்கம்’ என்ற பெயரில் ஒரு புதிய இயக்கத்தை  அவர் தொடங்கியுள்ளார். இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
திவ்யா சத்யராஜ்‌ மக்களிடம்‌ நன்கு அறிமுகமான ஊட்டச்சத்து நிபுணர்‌. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாகப்‌ பெரும்‌ இழப்புகளைச்‌ சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்‌ என்று சமீபத்தில்‌ விவசாய அமைச்சரிடம்‌ திவ்யா கேட்டுக்‌ கொண்டார்‌. திவ்யா சத்யராஜ்‌ “மகிழ்மதி' என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்‌.
 
"இந்தியாவில்‌ ஒர்‌ ஆண்டின்‌ கணக்கின்படி பத்து மில்லியன்‌ திருமணங்கள்‌ நடைப்பெறுகின்றன. அத்திருமணவிழாக்களில்‌ பரிமாறப்படும்‌ முப்பது விழுக்காடு உணவு விணாகின்றன". உணவும்‌, ஊட்டச்சத்தும்‌
வசதியுள்ளவர்களுக்கு மட்டுந்தான்‌ என்பது நியாயம்‌ இல்லை. வறுமைக்கோட்டிற்குக்‌ கீழ்‌ உள்ள குடும்பத்தினரும்‌, குழந்தைகளும் கொரோனா போன்ற தொற்றுக்களில்‌ இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின்‌
அவர்களுக்கும்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு தேவை.
 
“மகிழ்மதி இயக்கம்‌' அரசியல்‌ கட்சியோ, சாதி, மதம்‌ சார்ந்த அமைப்போ கிடையாது. வறுமைக்கோட்டிற்குக்‌ கீழ்‌ இருக்கும்‌ பகுதிகளில்‌ ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட ஓர்‌ இயக்கம்‌ கொரோனா ஊரடங்கு நேரத்தில்‌ வேலைகளுக்குச்‌ செல்ல முடியாமல்‌ வறுமையில்‌ வாடும்‌ குடும்பங்களுக்குத்‌ தரமான உணவு வழங்குகிறோம்‌. கொரோனா நேரத்தில்‌ மட்டும்‌ இல்லாமல்‌ தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை இவ்வியக்கம்‌ மேற்கொள்ளும்‌.
 
"மகிழ்மதி இயக்கம்‌' என்‌ கனவு. என்‌ இயக்கத்திற்கு ஒரு நல்ல தமிழ்ப்பெயர்‌ வைக்க வேண்டும்‌ என்று யோசித்தபோது, 'மகிழ்மதி' என்ற பெயர்‌ தோன்றியது. என்‌ அம்மா பெயர்‌ 'மகேஸ்வரி' அவர்‌ பெயரின்‌ முதல்‌ பாதியை என்‌ இயக்கத்தின்‌ பெயரில்‌ இணைக்க வேண்டும்‌ என்பது என்‌ ஆசை. 
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய கல்விக் கொள்கையால் புதுச்சேரிக்கு யூஸ் இல்லை! – முதல்வர் நாராயணசாமி!