Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தூர் பட்டாசு குடோனில் தீ விபத்து; 2 மணி நேர போராட்டம்!

Webdunia
வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (10:16 IST)
சாத்தூர் அருகே பட்டாசு குடோனில் திடீரென தீ பற்றியதால் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வள்ளிமயில் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோன் ஒன்று உள்ளது. நேற்று இரவு குடோனில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக குடோனில் திடீரென தீ பற்றியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் உள்ளே ஏராளமான வெடிப்பொருட்கள் இருந்ததால் மளமளவென பற்றிய தீ விடாமல் கொளுந்துவிட்டு எரிந்துள்ளது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பட்டாசு குடோனில் தீப்பற்றியால் பட்டாசுகள் வெடித்து சிதறியதை கேட்டு அங்கு மக்கள் கூட்டம் கூடியுள்ள. நெடுஞ்சாலைக்கு மிக அருகே குடோன் இருந்த நிலையில் தீ விரைவாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments