Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தலைமறைவா? கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்

Webdunia
வியாழன், 2 ஜூலை 2020 (06:50 IST)
சாத்தான்குளம் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தலைமறைவா?
சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் லாக்கப் மரணம் குறித்த வழக்கு தற்போது விறுவிறுப்பு அடைந்துள்ளது. இந்த வழக்கு நேற்று முதல் சிபிசிஐடி வசம் வந்த பிறகு அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன 
 
இந்த நிலையில் நேற்று இரவு முதல்கட்டமாக எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் என்பவரையும் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் முயற்சித்தனர். ஆனால் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருப்பதாகவும் அவரது மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து எஸ்.ஐ. பாலகிருஷ்ணனை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
மேலும் தந்தை மகன் மரணம் வழக்கில் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், எஸ்.ஐ.  ரவி கணேஷ், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இதனையடுத்து 6 பேர்களும் இன்று இரவுக்குள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மீது இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இருப்பினும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீதும் விரைவில் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
சாத்தான்குளம் வழக்கு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் நிலையில் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை விரைவில் முடித்து குற்றவாளிகள் அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments