Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் போலிஸ் ஸ்டேஷன் மீண்டும் காவல்துறை கட்டுப்பாட்டில் ? நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (15:16 IST)
வருவாய் துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலையம் மீண்டும் போலிஸார் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவமானது இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் இருவரின் மரணத்துக்குக் காரணமானவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஒருமித்த குரல் எழுந்துள்ளது.

இப்போது வழக்கு சிபிசிஐடி போலிஸார் கைவசம் உள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதையடுத்து காவல் நிலையத்தில் விசாரணை மற்றும் தடவியல் நிபுணர்களின் சோதனைகள் நடந்து முடிந்துள்ளன. இதனால் மீண்டும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் அந்த ஸ்டேஷனை மாற்றும்படி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளன.

160 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வாக காவல்துறை வருவாய் துறை கட்டுப்பாட்டுக்குள் சென்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் யுபிஐ சேவை திடீர் முடக்கம்! அதிர்ச்சியில் டிஜிட்டல் பயனாளிகள்..!

1 மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!

ஆன்லைன் விளையாட்டுக்கு தடை: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு

மீண்டும் தமிழக மீனவர்கள் 11 பேர் கைது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்.

அடுத்த கட்டுரையில்
Show comments