Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் வழக்கு- ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழப்பு - சிபிஐ தகவல்

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (16:02 IST)
சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவிலான கவனத்தை பெற்றுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தலையீட்டின் பெயரில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது.
 


அதன்படி இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் திருநெல்வேலி வழியாக கேரளாவிற்கு தப்பி செல்ல முயன்றபோது கங்கைகொண்டானில் பிடிபட்டார். இந்நிலையில் காவலர் முத்துராஜ் சிபிசிஐடியின் கைகளில் சிக்காமல் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை தேடி பிடிக்க வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

 
இதனைத்தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் விளாத்திகுளம் அருகே கீழமங்கலம் காட்டு பகுதியில் கேட்பாற்று கிடந்த காவலர் முத்துராஜின் இருசக்கர வாகனம் முதலில் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் பின்னர் விளாத்திக்குளம் அருகே பூசனூர் என்ற பகுதியில் வைத்து காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்டார்.

 
இந்தியாவே உற்றுப் பார்த்து வரும் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவர் மரண வழக்கில் அவர்களின் குடும்பத்திற்கு ஞாயமும் நீதியும்கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரது பிரார்த்தனையும்.

இதற்கிடையே, சாத்தான் குளம் இரட்டை மரணம் தொடப்பாக வழக்கில் சிபிசிஐடி போலீஸா கைது செய்து பேரூரணி சிறையில் அடைக்கப்பட்ட எஸ்.ஐ ஸ்ரீதர், 2 உதவி எஸ்.ஐக்கள், 2 காவலர்கள் என மொத்தம் ஐந்து பேர் பேரூரணி சிறையில் இருந்து பாதுகாப்பு காரணமாக மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டானர்.

இந்நிலையில், சாத்தான்குளம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரவி வருவதாகவும், பொய்யான தகவல்கள் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என சிபிசிஐடி எச்சரித்திருந்தது.
இந்நிலையில் சாத்தான் குளம் இரட்டை மரணம் சம்பந்தமாக  தீவிரமாக விசாரித்து வந்த சிபிஐ போலீஸார் கூறியுள்ளதாவது :

சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்திற்கு உடலில் இருந்த கடுமையான காயங்கள் தான் காரணம்  என்று தெரிவித்துள்ளது.

மேலும், பென்னிக்ஸ் உடலில் 13 இடங்களிலும், ஜெயராஜ் உடலில் 17 இடங்களிலும் காயங்கள் இருந்ததாக சிபிஐ போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இரட்டைக் கொலை வழக்கில் கைதாகிச் சிறையில் இருக்கும்  போலீஸாருக்கும் அவர்களுக்கு உதவியர்களுக்கும் இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments