Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசனை சந்தித்த சசிதரூர், கார்த்திக் சிதம்பரம்: காங்கிரஸ் உடன் கட்சியை இணைக்கின்றாரா?

Advertiesment
கமல்ஹாசனை சந்தித்த சசிதரூர், கார்த்திக் சிதம்பரம்: காங்கிரஸ் உடன் கட்சியை இணைக்கின்றாரா?
, செவ்வாய், 27 ஜூலை 2021 (20:39 IST)
kamal
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனை  காங்கிரஸ் எம்பிக்கள் சசிதரூர் மற்றும் கார்த்திக் சிதம்பரம் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல்ஹாசன் நடத்தி வருகிறார் என்பதும் அவரது கட்சி ஒரு பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஒரு சட்டமன்ற தேர்தலை சந்தித்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பெரும் எதிர்பார்ப்புடன் அரசியலுக்கு வந்த கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தார் என்றும் அவரே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கமல்ஹாசன் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஏற்பதாக ஏற்கனவே வதந்திகள் வெளியான நிலையில் தற்போது காங்கிரஸ் எம்பிக்கள் சசிதரூர் மற்றும் கார்த்திக் சிதம்பரம் ஆகிய இருவரும் சந்தித்துள்ளனர் 
 
இந்த சந்திப்பின் போது பல முக்கிய விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகர் சிரஞ்சீவி தனியாக அரசியல் கட்சி ஒன்று தொடங்கி அதன் பின் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது என்பது தெரிந்ததே. அதேபோல் கமலஹாசனும் காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் எவ்வளவு? அறிக்கை அனுப்ப உத்தரவு!