Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. சசிகாந்த் செந்திலுக்கு வாய்ப்பு..!

Siva
ஞாயிறு, 24 மார்ச் 2024 (07:07 IST)
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளும் புதுச்சேரி தொகுதியும் என மொத்தம் பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஏழு வேட்பாளர் பட்டியல் இதோ: 
 
திருவள்ளூர்  -  சசிகாந்த் செந்தில்
 
கரூர் - ஜோதிமணி
 
விருதுநகர் -  மாணிக்கம் தாகூர்
 
சிவகங்கை - கார்த்தி சிதம்பரம்
 
கன்னியாகுமரி -  விஜய் வசந்த்
 
கடலூர் - விஷ்ணு பிரசாந்த்       
 
கிருஷ்ணகிரி - கோபிநாத்
 
இதில் காங்கிரஸ் கட்சிக்காக கடந்த சில ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்த சசிகாந்த் செந்தில் அவர்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அதே நேரத்தில் சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரம் மற்றும் கரூர் தொகுதியில் ஜோதிமணி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி போட்டோ மாத்தி ஏமாத்த முடியாது! சிப் பொருத்திய e-Passport அறிமுகம்!

மசோதா நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிப்பதா? உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி..!

எங்க விசுவாசம் பாகிஸ்தான் கூடத்தான்..! இந்தியாவை காலை வாரிவிட்ட துருக்கி! - அதிபர் ஓப்பன் அறிவிப்பு!

ஆபரேஷன் சிந்தூருக்கு பின் ஜம்மு காஷ்மீரில் ஆய்வு.. நேரில் செல்கிறார் ராஜ்நாத் சிங்..!

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பம் பதிவாகலாம்.. வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments