Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்கே நகர் தேர்தலுக்கு பின்னர் அதிரடி நாடகம்?: தயார்நிலையில் சசிகலா!

ஆர்கே நகர் தேர்தலுக்கு பின்னர் அதிரடி நாடகம்?: தயார்நிலையில் சசிகலா!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (09:55 IST)
ஆர்கே நகர் தேர்தலுக்கு பின்னர் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை உடல்நிலை சரியில்லை எனக்கூறி 15 நாட்கள் வெளியே கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறைக்கு செல்லும் முன்னர் டிடிவி தினகரனை அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார். ஆனால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தன்னை வேட்பாளராக அறிவித்துக்கொண்டு களத்தில் இறங்கியுள்ள தினகரனோ சசிகலாவின் பெயரையும், படத்தையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.
 
மேலும் அதிமுகவை முழுமையாக டிடிவி தினகரன் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் சசிகலா மிகுந்த மனக்கசப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கட்சியில் தான் வைப்பது மட்டும் தான் சட்டம் என்கிற நிலைக்கு வந்துவிட்டார் தினகரன். மேலும் ஆர்கே நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றால் முதல்வர் பதவியில் அமர்ந்துவிடுவார் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.
 
நடப்பவைகளை எண்ணி ரொம்பவே அப்செட்டில் இருக்கும் சசிகலா ஆர்கே நகர் தேர்தல் முடிந்ததும் சிறையில் இருந்து வெளியே வந்து 15 நாட்கள் ஓய்வில் இருக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக ஒரு நாடகத்தை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
 
தனக்கு உடல்நிலை சரியில்லை என நாடகமாடி பெங்களூர் மருத்துவமனையில் ஓய்வெடுக்க தனது வழக்கறிஞர்கள் மூலம் தீவிரமான முயற்சியில் சசிகலா ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆர்கே நகர் தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறாராம் இந்த நடகத்தை நடத்த. மேலும் அதன் பின்னர் அதே உடல்நிலையை காரணம் காட்டி சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றும் ஐடியாவும் இருக்காம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி..!

120 மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. தவெக தலைவர் விஜய் அதிரடி..!

இன்றிரவும் இடி மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அதிமுக, திமுக 2 கட்சிகளுக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

காதலிக்கும் பெண்ணை முத்தமிடுவது பாலியல் துன்புறுத்தல் ஆகாது!? - நீதிமன்றம் அளித்த உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments