Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று மௌனம் கலைக்கிறார் சசிகலா: ஏற்பாடுகள் தீவிரம்!

இன்று மௌனம் கலைக்கிறார் சசிகலா: ஏற்பாடுகள் தீவிரம்!

Advertiesment
சசிகலா
, சனி, 31 டிசம்பர் 2016 (08:32 IST)
அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா இன்று பதவியேற்கிறார். ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பதவியேற்ற பின்னர் தொண்டர்களிடையே உரையாற்ற உள்ளார் சசிகலா.


 
 
ஜெயலலிதாவின் தோழியாக அவரது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பங்கெடுத்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அதிமுகவில் அவர் வகித்த அதிகாரமிக்க பொதுச்செயலாளர் பதவியை சசிகலா தான் வகிக்க முடியும் அவர் தான் அதற்கு சரியான நபர் என அதிமுக பொதுக்குழு கூடி முடிவெடுத்தது.
 
பொதுக்குழுவில் சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக தீர்மானம் நிறைவேற்றி அதனை சசிகலாவிடம் கொடுத்து அவரது சம்மதத்தை வாங்கினர் அதிமுகவினர். இதனையடுத்து இன்று பொதுச்செயலாளராக பொறுப்பேற்க உள்ளார் சசிகலா.
 
இதுவரை சசிகலாவின் குரலை கூட கட்சியினர் கேட்டதில்லை. சசிகலா எப்படி பேசுவார் என பலவித கற்பனைகளில் உள்ளனர் கட்சியினர். ஊடகங்களில் பேட்டி கொடுத்ததில்லை சசிகலா. கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரம் கூட இதுவரை செய்ததில்லை.
 
இந்நிலையில் சசிகலா வாய் திறந்து பேச வேண்டும் என பல ஊடகங்கள் காத்திருக்கின்றன. இதனையடுத்து இன்று நடைபெறும் பொதுச்செயலாளராக பொறுப்பேற்கும் விழாவில் சசிகலா கட்சியினரிடையே உரையாற்றகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இறந்து போனவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை! - இது உண்மையா?