Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகமே எதிர்த்தாலும் இது தான் நடக்கும்: மூன்றாவது பெண் முதல்வர் ரெடி!

தமிழகமே எதிர்த்தாலும் இது தான் நடக்கும்: மூன்றாவது பெண் முதல்வர் ரெடி!

Advertiesment
தமிழகமே எதிர்த்தாலும் இது தான் நடக்கும்: மூன்றாவது பெண் முதல்வர் ரெடி!
, புதன், 28 டிசம்பர் 2016 (13:05 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து தமிழக அரசியலிலும், அதிமுகவிலும் ஒரு அசாதரனமான சூழல் நிலவி வருகிறது. வருமான வரித்துறை மூலம் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள், அரசியல் நகர்வுகள் என தமிழகம் பரபரத்துக்கொண்டிருக்கிறது.


 
 
தலைமை இல்லாத ஆளும் கட்சியின் பலவீனத்தில் சிலர் அரசியல் ஆதாயம் அடைய நினைத்தாலும் ஆளும் கட்சியின் தலைமைக்கு வர இருப்பவருக்கு இருக்கும் எதிர்ப்புகள் அதிகரிக்கத்தான் செய்கிறது. சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என ஒருக்கூட்டம். அதில் சிலர் சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
 
இன்னொரு தரப்பினர் சசிகலாவை எதிர்த்து வருகின்றனர். பன்னீர்செல்வம் அல்லது தீபா தான் கட்சியை வழி நடத்த வேண்டும் என கூறுகின்றனர். கடைசி நேரத்தில் பன்னீர்செல்வம் பொங்கியெழுந்து கட்சியை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பில் நாளை கூட இருக்கிறது அதிமுக பொதுக்குழு கூட்டம்.
 
இந்த பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா தான் அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள் என பலரையும் தன் வசம் வைத்திருக்கும் சசிகலா பல்வேறு வியூகங்கள் வகுத்து எதிர்ப்புகளை தவிடுபொடியாக்கி அதிமுக பொதுச்செயலாளர் ஆவர் எனவும் வரும் தை மாதத்தில் முதல்வராகவும் அவர் பதவியேற்பார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். தமிழகமே எதிர்த்தாலும் இது தான் நடக்கும் என அடித்து சொல்கின்றனர் அந்த கட்சியினர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பன்னீர் அரசை விழுங்க வந்த அலாவுதீனின் பூதம் - ராம் மோகன் ராவ்