Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் டேரா போட்ட வக்கீல்? தாமதமாகிறதா சசிகலா விடுதலை...

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (09:58 IST)
சசிகலாவை விடுவிக்க அவரது வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் பெங்களூருவில் முகாமிட்டுள்ளார்.  
 
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பாரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிக்கலா கட்டவேண்டிய அபராத தொகையான ரூ.10.10 கோடி நேற்று செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அபராத தொகையை செலுத்தி விட்டதால் சசிகலா தண்டனை காலம் குறைக்கப்பட்டு விரைவில் விடுதலை செய்யப்படுவார் என பேசிக் கொள்ளப்பட்டது.
 
ஆனால், இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் சேஷமூர்த்தி, அபராதம் செலுத்தி விட்டதால் மட்டும் சசிகலா உடனடியாக விடுதலையாக வாய்ப்பில்லை. அபராதம் செலுத்தினாலும் ஜனவரி 20-க்கு பிறகே சசிகலா விடுதலை செய்யப்படுவார். இன்னும் அவரது விடுதலை நாள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறினார். 
 
இந்நிலையில், பெங்களூருவில் முகாமிட்டு உள்ள சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன், கர்நாடக மாநில சிறைத்துறை டி.ஜி.பி., டி.ஐ.ஜி. பரப்பன அக்ரஹார சிறைத்துறை முதன்மை கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவுக்கு வழங்கப்பட வேண்டிய சலுகை காலத்தை அளித்து அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியை ரமணியை கத்தியால் குத்தியது ஏன்? கைதான மதன்குமார் வாக்குமூலம்..!

நெருப்பில்லாமல் புகையாது: அதானி-தமிழக அரசு ஒப்பந்தம் குறித்து பிரேமலதா..!

எடப்பாடி தரப்பில் இருந்து பரப்பப்பட்ட வதந்தி? விஜய் எடுத்த அதிரடி முடிவு..!

மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து விவகாரம்: இளைஞர் விக்னேஷுக்கு ஜாமின் மறுப்பு!

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments