Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலா நைட்டி அணிந்திருப்பதை பார்த்த பின்பு எதற்கு விளக்கம்: ரூபா அதிரடி பேட்டி!

சசிகலா நைட்டி அணிந்திருப்பதை பார்த்த பின்பு எதற்கு விளக்கம்: ரூபா அதிரடி பேட்டி!

Advertiesment
சசிகலா நைட்டி அணிந்திருப்பதை பார்த்த பின்பு எதற்கு விளக்கம்: ரூபா அதிரடி பேட்டி!
, வியாழன், 20 ஜூலை 2017 (09:24 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைவிதிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி சசிகலா சிறையில் பல்வேறு வசதிகளை பெற்று சொகுசாக வாழ்ந்து வருகிறார் என தகவல்கள் வந்தவாறே உள்ளன.


Image Source Prajaa Tv
 
 
சிறைத்துறை டிஐஜி ரூபா இது தொடர்பாக அறிக்கை அனுப்பிய பின்னர் பூதாகரமாக வெடித்த இந்த விவகாரத்தில் நாளுக்கு நாள் அதிர்ச்சி அளிக்கும் ஒவ்வொரு விஷயமாக வெளிவந்தவாறே உள்ளன.
 
சசிகலா சிறையில் நைட்டியுடன் ஜாலியாக வலம் வருவது, சுடிதார் அணிந்துகொண்டு வெளியே ஷாப்பிங் சென்று வருவது என வீடியோக்கள் மற்றும் சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது.
 
ஆனால் இவற்றிற்கு அதிமுகவினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவின் தீவிர விசுவாசியான கர்நாடக மாநில அதிமுக பொதுச்செயலாளர் புகழேந்தி இந்த வீடியோக்கள் பாகுபலியை மிஞ்சும் கிராஃபிக்ஸ் வீடியோக்கள் என கூறினார்.
 
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த டிஐஜி ரூபா, சிறைக்கு சென்று ஆய்வு நடத்த என்னை யாரும் அறிவுறுத்தவில்லை. சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ள சிறைக்கு சென்ற போதுதான் இந்த விஷயங்கள் தெரியவந்தது.
 
அது தொடர்பாக நேரில் விளக்கி கூற சென்றபோது மேலதிகாரி அதனை காது கொடுத்த கேட்கவில்லை. அதனால் தான் அறிக்கையாக அதனை எழுத்து பூர்வமாக அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
 
மேலும், தொலைக்காட்சிகளில் வரும் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் உண்மையே. அவர் நைட்டி அணிந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். எனவே நான் அறிக்கை குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. அது சரியாகவும் இருக்காது என ரூபா தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல், ஸ்டாலின், ஓபிஎஸ் கூட்டணியா? ஜெயகுமார் கேள்வி