Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பத்துடன் மோதல் - பரோலுக்கு முன்பே சிறைக்கு செல்லும் சசிகலா?

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (13:49 IST)
தனது கணவர் நடரஜானின் சொத்துக்களை பிரிப்பதில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
தனது கணவர் நடராஜன் மரணமடைந்ததால் 15 நாட்கள் பரோலில் வெளிவந்த சசிகலா தற்போது தஞ்சையில் உள்ள நடராஜனின் பூர்வீக வீட்டில் தங்கியிருக்கிறார். நடராஜன் தொடர்பான சடங்குகளை அவர் முன்னின்று நடத்தி வருகிறார்.

 
இந்நிலையில், நடராஜனுக்கு தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் பல சொத்துக்கள் இருக்கின்றன. அவைகளை பிரிப்பதில் நடராஜனின் உடன் பிறந்தவர்களுக்கும், சசிகலா தரப்பினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
நடராஜனுக்கு விளார் கிராமத்தில் ஒரு வீடு உள்ளது. அது தவிர ஏராளமான நிலங்களை அவர் வாங்கிப் போட்டிருந்தார்.  தற்போது அவர் மரணமடைந்து விட்டதால், அனைத்து சொத்துக்களும் சசிகலாவிற்கு வர வேண்டும் என்பதுதான் சட்டவிதி. ஆனால், இதற்கு நடராஜனின் உடன் பிறந்தோர் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை.

 
நடராஜனின் உடன் பிறந்தவர்களில் 4 ஆண்கள், 2 பெண்கள் என 6 பேர். அவர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் என பட்டியல் நீள்கிறது. அதேபோல், சசிகலா மற்றும் அவருடன் பிறந்தோர், அவர்களின் குழந்தைகள், பேரக்குழந்தைகள் என பட்டியல் நீள்கிறது. 
சசிகலா அவரின் குடும்பத்தினரை மட்டுமே வளர்த்துவிட்டார், நமக்கு எதுவும் செய்யவில்லை என்கிற கோபம் ஏற்கனவே நடராஜன் உடன்பிறந்தோர் குடும்பத்தினருக்கு இருப்பதாக தெரிகிறது. எனவே, நடராஜன் வாங்கியுள்ள சொத்துக்களை சசிகலா தரப்பிற்கு கொடுக்க மாட்டோம் என அவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
 
இதனால் அதிருப்தி அடைந்த சசிகலா, எனக்கு எந்த சொத்தும் வேண்டாம். நான் பரோல் முடியும் முன்பே சிறைக்கு சென்று விடுகிறேன் என கோபாமாக பேசினாராம். மேலும், நடராஜனுக்கான சடங்குகளை கூட மைத்துனர் என்கிற முறையில், சசிகலாவின் சகோதரர் திவாகரனை செய்ய விடாமல், நடராஜன் குடும்பத்தினரே செய்து விட்டார்கள் எனவும், இதனால் கோபமடைந்த திவாகரன் அங்கிருந்து கிளம்பிவிட்டார் எனவும் கூறப்படுகிறது. ஏனெனில், கொள்ளி வைப்பவருக்கே சொத்துக்கள் சொந்தம். அதை நடராஜனின் சகோதரர் மகனே செய்து விட்டார். 
 
இப்படி அனைத்து விஷயங்களிலும் தங்களை புறக்கணிப்பதோடு, சொத்துக்களை பிரிப்பதிலும் மோதல் போக்கை கடைபிடிப்பதால் சசிகலா மன உளைச்சலில் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments