கொரோனா காரணமாக பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சசிக்கலா தமிழகம் வரும் தேதியை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
	
	
	சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடல்நலம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள அவர் தனிமைப்படுத்தல் காரணமாக பெங்களூர் பண்ணை வீட்டில் ஓய்வில் உள்ளார்.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில் தனிமைப்படுத்தல் முடிந்து பிப்ரவரி 7ம் தேதி அவர் தமிழகம் புறப்படுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகம் வரும் சசிக்கலா முன்னதாக மன்னார்குடி செல்ல உள்ளதாக பேசிக் கொள்ளப்பட்டது. தற்போது கொரோனா தொற்று காரணமாக தமிழகம் வந்தாலும் அவர் சில நாட்கள் ஓய்வில் இருப்பார் என்று பேசிக் கொள்ளப்படுகிறது.