மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, முதல் முறையாக போயஸ் கார்டன் முகவரில் லட்டர் பேடு பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து, அவரின் தோழி சசிகலா போயஸ் கார்டனின் வசித்து வருகிறார். அவருடன் அவரின் உறவினர் இளவரசி மற்றும் அவரின் மகன் விவேக் ஆகியோர் மட்டும் வசித்து வருவதாகவும், கணவர் உட்பட மற்ற உறவினர்களை சசிகலா போயஸ் கார்டனலிருந்து வெளியேறுமாறு கூறிவிட்டார் என்ற தகவல் முன்பே வெளியானது.
அதன்பின், போயஸ் கார்டன் வீடு மற்றும் ஜெ.வின் இதர சொத்துகள் யாருக்கு சொந்தம் என அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம், போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேறவுள்ளதாகவும், கார்டன் வீட்டை ஜெ.வின் நினைவகமாக மாற்ற உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், ஜெ.வின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சசிகலா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் வி.கே. சசிகலா என்ற பெயரில், போயாஸ் கார்டன் வீட்டின் முகவரி பதிக்கப்பட்ட லெட்டர் பேடில் உருவாகியுள்ளது.
இதன் மூலம், முதல் முறையாக சசிகலா அரசு தொடர்பான ஒரு கடிதம் எழுதி, தனது அரசியல் நிலையை உறுதி செய்துள்ளார். அடுத்து, போயஸ் கார்டனில் தனது இருப்பையும் அவர் உறுதி செய்துள்ளார் என பேசப்படுகிறது.