Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலா சிறையில் அடைக்கப்படும் காட்சி! (வீடியோ இணைப்பு)

சசிகலா சிறையில் அடைக்கப்படும் காட்சி! (வீடியோ இணைப்பு)

Advertiesment
சசிகலா சிறையில் அடைக்கப்படும் காட்சி! (வீடியோ இணைப்பு)
, வியாழன், 16 பிப்ரவரி 2017 (08:41 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 3 பேர் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து நேற்று சசிகலா உட்பட மூன்று பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.


 
 
நேற்று முன்தினம் சரணடைய வேண்டிய சசிகலா தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறி 4 வார கால அவகாசம் கேட்டிருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்து உடனடியாக சரணடைய வேண்டும் இல்லையென்றால் கைது செய்து அழைத்து செல்லப்படுவார் என எச்சரித்தது.
 
இதனையடுத்து பெங்களூர் சிறைக்கு நேற்று மதியம் புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி சபதம் செய்து விட்டு அங்கிருந்து ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்துக்கு கிளம்பி சென்றார்.
 
அங்கு அங்கு எம்ஜிஆர் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய சசிகலா அங்கு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். பின்னர் வெளியே இருந்த எம்ஜிஆர் சிலைக்கும் மரியாதை செலுத்தினார். பின்னர் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள கூடுதல் உரிமையியல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராக சென்றனர்.

 

 
 
சரியாக 5.15 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த சசிகலா நீதிபதி அஸ்வத் நாராயனா முன் சரணடைந்தார். அதன் பின்னர் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கைதிகளுக்கான எண் இவர்களுக்கு வழங்கப்பட்டது. சசிகலாவுக்கு 10711 என்ற எண்ணும், இளவரசிக்கு 10712 என்ற எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சசிகலாவும், இளவரசியும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட காட்சி செல்போனில் வீடியோ எடுக்கப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு ஏலத்திற்கு வருமா?