அதிமுக, திமுக கூட்டணியின் வேலைகள் பரபரப்பாக இருந்து வரும் நிலையில் ஒட்டுமொத்த மீடியாவின் பார்வை இந்த இரண்டு கூட்டணி மீது மட்டுமே உள்ளது. தினகரன், கமல் கட்சி, சீமான் கட்சி ஆகிய கட்சிகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் இந்த கட்சிகளின் செய்திகள் பரபரப்பாகவில்லை
இந்த நிலையில் தினகரனின் ஆதர்வாளர்கள் சமீபத்தில் பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்ததாகவும், சசிகலா சில தகவல்களை தினகரனுக்கு சொல்லி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது
அதில் முக்கியமானது எந்த கட்சியுடனும் கூட்டணி வேண்டாம். நாம் நம் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி.
அதேபோல் இப்போதைக்கு அதிமுகவில் இருந்து யார் வந்தாலும் சேர்த்து கொள்ளவேண்டாம். வேட்பாளர் தேர்வில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்கள் விருப்பப்பட்டால் அவர்களையே வேட்பாளராக நிறுத்தலாம் போன்ற ரகசிய தகவல்களை சசிகலா அனுப்பியதாக கூறப்படுகிறது இந்த தகவல் வந்ததில் இருந்து தினகரன் மிகுந்த உற்சாகத்துடன் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டாராம்