Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024-ல் அம்மா ஆட்சி – சின்னம்மா உறுதி!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (18:04 IST)
பிரிந்து இருக்கிற அதிமுகவை ஒன்று சேர்த்து 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என சசிகலா பேட்டி.


அதிமுகவில் தற்போது ஓபிஎஸ் இபிஎஸ் என இரண்டு பிரிவுகள் ஆகிவிட்டது என்பதும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக குறித்து கருத்து கூறியுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதிகாரத்திற்காக யாரை வேண்டுமானாலும் அழிக்க நினைப்பவர் என்றும் தெரிவித்தார்.

மேலும் வரும் காலத்தில் ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து அரசியல் செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒருபோதும் கைகோர்க்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சசிகலா பேட்டியளித்த போது அவர் கூறியதாவது, 40 வருடமாக அதிமுகவில் இருந்துள்ளேன். எல்லா அரசியல் சூழல்நிலைகளையும் பார்த்துள்ளேன். பிளவுகளை கடந்து நிச்சயமாக அதிமுக  ஒன்றிணையும். அதிமுக வெற்றி வாகை சூடும். அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்.

அதிமுக தனிப்பட நபருக்கான கட்சி அல்ல, அது ஏழைக்கான கட்சி. அதிமுக தொண்டர்கள் அனைவரும் என்னுடன் தான் உள்ளனர். பிரிந்து இருக்கிற அதிமுகவை ஒன்று சேர்த்து 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments