Publish Date: Fri, 05 Feb 2021 (08:03 IST)
Updated Date: Fri, 05 Feb 2021 (08:04 IST)
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சசிகலா அந்த மருத்துவமனையின் மருத்துவர்களிடம் பேசியது குறித்த தகவல் தற்போது ஊடகங்களில் வெளிவந்துள்ளது
பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்களிடம் தண்டனை முடியும் நேரத்தில் திடீரென மருத்துவமனையில் சேர்ந்த நிலையில் கொரோனா என கூறியபோது நம்மைச்சுற்றி என்ன நடக்கின்றது என்று தெரியாமல் குழப்பம் ஆகி விட்டேன். அடுத்த நிமிஷமே செத்தா அம்மா கிட்ட போவோம், பிழைத்தால் மக்கள் கிட்ட போவோம், என்று நினைத்து என்னை நானே தைரியமாக கொண்டேன். மனநிலையை மாற்றிக் கொள்வது தானே எல்லா காயங்களுக்குமான மருந்து என மருத்துவர்களிடம் சசிகலா கூறியதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தற்போது கொரோனா வைரஸிலிருந்து அவர் முழுமையாக குணம் அடைந்து விட்டதால் தமிழகம் வந்த பிறகு அவர் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. தமிழக அரசியலில் ஈடுபடுவாரா? அல்லது ஓய்வெடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்