Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்!

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்!

Advertiesment
சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் திடீர் மரணம்!
, சனி, 15 ஏப்ரல் 2017 (10:42 IST)
அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன் இன்று காலை திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.


 
 
சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதகனின் மூத்த மகன் மகாதேவன் திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்றபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 47 வயதான இவர் தஞ்சாவூரில் வசித்து வந்தார்.
 
ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் சர்வ அதிகாரத்துடன் வலம் வந்த மகாதேவன் ஜெயலலிதா பேரவையின் மாநில செயலாளராக இருந்தவர். அதன் பின்னர் ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டு ஒரேயடியாக போயஸ் கார்டனில் இருந்தும் கட்சியிலிருந்தும் விரட்டப்பட்டார்.
 
இந்நிலையில் இன்று அவர் திருவிடைமருதூர் கோவிலுக்கு சென்ற போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. இதனை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
 
47 வயதான மகாதேவன் திடீரென இறந்தது சசிகலா குடும்பத்தினருக்கும், அதிமுகவினருக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இவரது இறுதிச்சடங்கிற்கு சிறையில் உள்ள அவரது அத்தை சசிகலா வருவாரு என்பது இன்னும் உறுதியாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்க பதவி விலகினா நல்லா இருக்கும்: தினகரனை விளாசிய அமைச்சர் இவர் தான்!