Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினகரன் மீது உச்சகட்ட கோபத்தில் சசிகலா; தூது போன சினிமா பிரமுகர் - நடந்தது என்ன?

தினகரன் மீது உச்சகட்ட கோபத்தில் சசிகலா; தூது போன சினிமா பிரமுகர் - நடந்தது என்ன?
, புதன், 29 மார்ச் 2017 (11:40 IST)
தன்னை எங்கும் முன்னிறுத்தாத தினகரன் மீது கோபத்தில் இருந்த சசிகலாவை, சமீபத்தில் ஒரு சினிமா பிரமுகர் சந்தித்து பேசி அவரை சாந்தப்படுத்திய விவகாரம், தினகரனுக்கு எதிராக காய் நகர்த்திக் கொண்டிருக்கும் திவாகரனுக்கு கோபத்தை ஏறபடுத்தியுள்ளதாக செய்திகள் உலா வருகிறது.


 

 
அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, ஓ.பி.எஸ் மற்றும் தினகரன் என இரண்டு அணிகள் உருவாகி விட்டன. மேலும், அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னமும் தினகரனுக்கு கிடைக்க விடாமல் செய்து விட்டது ஓ.பி.எஸ் தரப்பு. அதற்கு ஒரு படி மேலே போய், அதிமுக என்கிற பெயரையே யாரும் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.  
 
எனவே வழக்கமாக இரட்டை இலைக்கு கிடைக்கும் ஓட்டுகள் இந்த முறை தினகரனுக்கு கிடைக்காது. மேலும், ஏற்கனவே, ஜெ.வின் மரணத்தில் சசிகலா மீது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்களின் ஓட்டு நிச்சயம் தினகரனுக்கு கிடைக்காது என ஓ.பி.எஸ் தரப்பு நம்புகிறது. இதை, உளவுதுறை அதிகாரிகள் மூலம் உணர்ந்துள்ளார் தினகரன். எனவே, ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்யும் போது, எந்த இடத்திலும் சசிகலாவின் பெயரை அவர் உச்சரிப்பதில்லை.  ஜெ.வின் திட்டங்கள் குறித்து மட்டுமே அவர் பேசி வருகிறார். 

webdunia

 

 
அதுமட்டுமல்ல, இளவரசியின் மகன் விவேக் மற்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மற்றும் கணவர் நடராஜன் ஆகியோரை கூட கட்சி நடவடிக்கைகளுக்குள் தினகரன் அனுமதிப்பதில்லை. எனவே, தினகரனின் நடவடிக்கை குறித்து ஏற்கனவே விவேக் மற்றும் திவாகரன் ஆகியோர் சிறையில் சசிகலாவிடம் முறையிட்டுள்ளனர். இதன் விளைவாக தினகரன்  மீது சசிகலா கடுமையான கோபத்தில் இருப்பதாகவும், அவர்கள் இருவருக்குமிடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

webdunia

 

 
இந்நிலையில், இதை சரி செய்யும் விதமாக, தஞ்சையை சேர்ந்த சினிமா பிரமுகர் ஒருவரை தினகரன் தரப்பு பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேச அனுப்பியதாக தெரிகிறது. அப்போது, தினகரன் மீது கோபத்தில் இருந்த சசிகலாவிடம் பொறுமையாக பேசிய அந்த நபர், தினகரன் தரப்பு நியாயங்களை எடுத்து கூறி சசிகலாவின் கோபத்தை தணித்ததாக தெரிகிறது.
 
கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆதிக்கம் செலுத்தினால், பெயர் கெட்டு போகும். அதனாலேயே அவர்களை தினகரன் தடுத்து வருகிறார். அவர்களுக்கு தேவையானதை, தேவையான நேரத்தில் அவர் செய்து கொடுக்க தயாராக இருக்கிறார். மேலும், பிரச்சாரத்தில் உங்கள் பெயரை பயன்படுத்தினால், எதிர்கட்சியினர் அதை சாதகமாக்கி கொள்வார்கள். எனவே, தினகரன் வெற்றி பெற முடியாது எனக் கூறி ஒரு வழியாக சசிகலாவை அவர் சமாதனம் செய்துள்ளாராம். 
 
இதில், சசிகலாவிடம் தினகரன் பற்றி பல புகார்களை கூறி, அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தி வைத்திருந்த திவாகரன் தரப்பிற்கு, இந்த விவகாரம் எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளதாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் அதிரடி கைது!