Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவில் இருந்து குணமானார் சசிகலா: எப்போது டிஸ்சார்ஜ்?

Advertiesment
கொரோனாவில் இருந்து குணமானார் சசிகலா: எப்போது டிஸ்சார்ஜ்?
, செவ்வாய், 26 ஜனவரி 2021 (07:33 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அவர்கள் சமீபத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சசிகலாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கை ஒன்றில் சசிகலாவுக்கு கொரோனா இல்லை என்றும் ஆனாலும் அவருக்கு சர்க்கரை அளவு 158ல் இருந்து 256  என உயர்ந்துள்ளதால் இன்சுலின் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் சசிகலாவின் ரத்த அழுத்தம் நாடித்துடிப்பு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மிகவும் சீராக உள்ளது என்றும் அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் பிரச்சனையும் தற்போது குறைந்து உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
மேலும் அவரே உணவு எடுத்துக் கொண்டு வருவதாகவும் ஒருவரின் உதவியுடன் கைத்தாங்கலாக நடந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கொண்டு வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் சசிகலா நாளை சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி: டெல்லியில் நுழையாமல் தடுக்க பிரம்மாண்ட தடுப்புகள்