Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலாவின் பரோல் சபதம்: 11 நாட்களில் முடித்து காட்டுவாரா?

Advertiesment
சசிகலாவின் பரோல் சபதம்: 11 நாட்களில் முடித்து காட்டுவாரா?
, சனி, 24 மார்ச் 2018 (21:02 IST)
கணவர் நடராஜன் இறந்ததால் சசிகலாவிற்கு 15 நாட்கள் பரோலில் வெளிவந்து உள்ளார். சசிகலாவின் பரோல் விடுப்பு முடிவதற்கு இன்னும் 11 நாட்கள் இருக்கின்றன. 
 
நடராஜன் இறுது சடங்கு முடிந்த அடுத்த நாளே பஞ்சாயத்துகள் களைகட்ட தொடங்கிவிட்டனவாம். நடராஜன் சொத்து விவகாரம்,  சொத்துக்களை முறைப்படி மாற்றவது உள்பட குறித்து தீவிர விவாதம் நடந்த்தாம். 
 
அதேநேரம், தனிக்கட்சியின் விளைவுளை பற்றியும் பேசி வருகின்றாராம். திவாகர்ன் அவ்வப்போது தினகரனைப்பற்றி கூறி வந்தாலும் அனைத்தையும் கேட்டுக்கொண்ட அமைதியாக உள்ளாராம். 
 
ஆனால், சசிகலாவிற்கு ஆதரவு கூற வருபவர்களிடம், நம்மிடம் கும்பிடு போட்டுவிட்டு பதவியில் உட்கார்ந்தவர்கள் எல்லாம் நமக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எத்தனை நாட்கள் பேசப் போகிறார்கள் என்று பார்க்கிறேன். 
 
நான் நினைத்தால் ஒரேநாளில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும். அங்கிருக்கும் பலரும் உள்ளுக்குள் புழுங்கியபடிதான் இருக்கிறார்கள். பரோல் முடிவதற்குள் நான் யார் என்பதைக் காட்டாமல் விடமாட்டேன். என் கையைவிட்டுப் போன அதிகாரம், என் கைக்கே மீண்டும் வரும் என தெரிவித்து வருகிறாராம். 
 
ஆகமொத்தம் இந்த 11 நாட்களுக்கு ஏதெனும் அதிரடி முடிவுகளை எடுப்பாரா அல்லது ஜெயலலிதா சமாதியில் செய்த சபதம் போல் பரோல் சபதமும் சத்தமில்லாமல் போய்விடுமா என தெரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டிக்கர் கலாச்சாரம் முடிந்தது என்று யாருப்பா சொன்னாங்க !