அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா மீது பகீர் புகார்களை வைத்துள்ளார்கள் அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த இரண்டு இளம்பெண்கள்.
அதிமுக தலைமை தன்னை அடித்ததாகவும், பதவி விலக தன்னை வற்புறுத்துவதாகவும், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் மாநிலங்களவையில் கூறிய சசிகலா புஷ்பா, பெண்கள் பாதுகாப்பு எங்கே என கேள்வி எழுப்பினார். ஆனால் இன்று சசிகலா புஷ்பாவே இரண்டு பெண்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தி, பாலியல் துன்புறுத்தலுக்கு வழிவகை செய்து அவர்களை கொடுமைப்படுத்தியதாக இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள். இவர்கள் சசிகலா புஷ்பாவின் சென்னை மற்றும் தூத்துக்குடி வீடுகளில் வேலைபார்த்தவர்கள். தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று இவர்கள் சசிகலா புஷ்பா மீது புகார் அளித்தனர்.
குடிபோதையில் சசிகலா புஷ்பா துன்புறுத்தினார், அவரது கணவரும், மகனும் பாலியல் ரீதியாக சித்ரவதை செய்தனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறியுள்ளனர்.
புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள் கண்ணீர் மல்க பேசினர், சசிகலா புஷ்பா தினமும் ஆடைகளை கழற்றிப்போட்டுதான் தூங்குவாங்க அப்ப நாங்க மசாஜ் பண்ணிவிட்டுகிட்டே இருக்கனும்.
சசிகலா புஷ்பாவின் மகன் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கார். இது பற்றி சசிகலா புஷ்பாவிடம் சொன்னா, நானும் 18 வயசில அப்படிதான் அட்ஜெஸ்ட் பண்ணி போனேன். நீயும் அப்படி அட்ஜெஸ்ட் பண்ணி போயேன்னு சொல்வாங்க. சசிகலா புஷ்பாவின் மாதவிடாய் கழிவுகளைக் கூடா நாங்கதான் அகற்றனும்.
இந்த கொடுமைகளால் தாங்கள் தற்கொலைக்கு கூட முயன்றதாக அந்த இளம்பெண்கள் கூறியிருக்கிறார்கள். தோசை சுடும் போது தலையை தோசைக்கலில் முட்ட வைத்து அடிப்பது போன்ற கொடுமைகளை செய்த சசிகலா புஷ்பாவுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.