Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உளவுத்துறை தகவல்: நடராஜனுக்கு கல்தா கொடுத்த சசிகலா!

உளவுத்துறை தகவல்: நடராஜனுக்கு கல்தா கொடுத்த சசிகலா!

Advertiesment
உளவுத்துறை தகவல்: நடராஜனுக்கு கல்தா கொடுத்த சசிகலா!
, வியாழன், 15 டிசம்பர் 2016 (11:35 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. சசிகலா தான் அடுத்த பொதுச் செயலாளராக வர வேண்டும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


 
 
ஆனால் மக்கள் மத்தியிலும், தொடர்கள் மத்தியிலும், கட்சியில் உள்ள சிலரின் மத்தியிலும் சசிகலா தலைமை ஏற்பதற்கு அதிருப்தி இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜனை முன்னிலைப்படுத்தினால் மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்காது என சசிகலாவுக்கு உளவுத்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர்.
 
இதனையடுத்து சசிகலா தனது கணவர் நடராஜன் மற்றும் அவரது சொந்தங்களை இன்னும் போயஸ் கார்டன் வீட்டிற்கு வரக்கூடாது என கூறியதாக தகவல் வருகிறது. போயஸ் கார்டனில் இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஜெயலலிதா இருந்த அம்மா என்ற இடத்தை சின்னம்மா என்ற பட்டத்தின் மூலம் பெற வேண்டும் என பேனர்கள் விளம்பரங்கள் மூலம் ஆதரவு திரட்டி வருகிறார் சசிகலா. மேலும் இதுவரை அதிமுகவினர் சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா புகைப்படம் மட்டும் தான் இருக்கும் தற்போது சசிகலா புகைப்படமும் சேர்ந்து இடம்பெற ஆரம்பித்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபாச படங்களை அதிகமாக பார்க்கும் சிறார்கள் - அதிர்ச்சி தகவல்