எடப்பாடியின் பலவீனங்கள் இதுதான்: சசிகலாவின் முக்கிய அட்வைஸ்!

எடப்பாடியின் பலவீனங்கள் இதுதான்: சசிகலாவின் முக்கிய அட்வைஸ்!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (13:18 IST)
தனது கணவரின் உடல் நிலையை காரணம் காட்டி பரோலில் வந்துள்ள சசிகலாவுக்கு இன்றுடன் பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு செல்ல இருக்கிறார். இந்நிலையில் அவர் எடப்பாடி பழனிச்சாமியை வீழ்த்த சில திட்டங்கள் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.


 
 
பரோலில் வெளியே வந்துள்ள சசிகலாவால் அரசியல் மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவர் அரசியல் தலைவர்கள் யாரையும் சந்திக்க கூடாது என நிபந்தனை விதித்துள்ளதாக தினகரன் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 
சசிகலாவுக்கு இவ்வளவு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என அவர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் 5 நாட்கள் வீடு, மருத்துவமனை என உள்ள சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை எப்படி வீழ்த்த வேண்டும் என தினகரனுக்கு முக்கிய அட்வைஸ் செய்ததாக கூறப்படுகிறது.
 
தினகரனுக்கும், திவாகரனுக்கும் சில முக்கிய வேலைகளை கொடுத்துள்ள சசிகலா, எடப்பாடி பழனிசாமியின் பலவீனங்களைப் பட்டியலிட்டு அவரை எப்படி அணுக வேண்டும் என சில முக்கியமான சில விஷயங்களை சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் அதிமுகவில் சில அதிரடிகள் அரங்கேறும் என பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments