Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்துக்குவிப்பு வழக்கை திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்: சசிகலா புதிய மனு!

சொத்துக்குவிப்பு வழக்கை திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்: சசிகலா புதிய மனு!

Webdunia
செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (11:25 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் தண்டனை உறுதி செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது தரப்பில் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க இன்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 
 
சசிகலா சார்பில் ஏற்கனவே சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அந்த மனு மீதான விசாரணை இன்று வர உள்ளது. இந்நிலையில் சசிகலா சார்பில் இன்று புதிய மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் சொத்துக்குவிப்பு வழக்கை திறந்தவெளி நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்க சசிகலா கோரிக்கை வைத்துள்ளார்.
 
ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கை 18 ஆண்டுகளுக்கு இழுத்தடித்த சசிகலா தரப்பு மீண்டும் விசாரிக்க கோரிக்கை வைத்திருப்பது தள்ளுபடியாக வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கில் அனைத்து மேல்முறையீடும் முடிந்துவிட்டதால் சசிகலா தரப்பு மீண்டும் திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments