சசிகலாவை உடனடியாக அப்பல்லோவை விட்டு வெளியேற்ற வேண்டும்!
சசிகலாவை உடனடியாக அப்பல்லோவை விட்டு வெளியேற்ற வேண்டும்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 18 நாட்களாக உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவரை கவனித்து வருகிறார். இந்நிலையில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை இந்த அளவுக்கு மோசமாக காரணம் சசிகலாவின் குடும்பம் தான். முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
மேலும் கட்சியையும் ஆட்சியையும் சசிகலா கைப்பற்ற நினைக்கிறார். அதிகாரிகள் சுயமாக செயல்பட வேண்டும். முதல்வருக்கு உதவி செய்பவர்கள் எல்லாம் ஆட்சியை வழிநடத்த கூடாது என கூறிய அவர் சசிகலாவை உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றார் அதிரடியாக.