Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈபிஎஸ் தொகுதிக்கு சென்று சசிகலா சூளுரை: என்னவென்று தெரியுமா?

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (09:03 IST)
தொண்டர்களின் உறுதுணையுடன் மீண்டும் அதிமுகவின் ஆட்சி அமைத்து தமிழக மக்களை காத்திடுவேன் என சசிகலா பேச்சு. 

 
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த சசிகலா, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். 
 
அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் என்று சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் மேல்முறையீட்டுக்கு ஆன பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது. 
 
இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதிக்கு தொண்டர்களை சந்திப்பதற்காக சுற்றுப்பயணம் சென்றிருந்தார் சசிகலா. அப்போது அவர் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது, எம்ஜிஆர் அதிமுக இயக்கத்தை ஆரம்பித்தார். ஜெயலலிதா இயக்கத்தை வளர்த்தார். ஆரம்ப காலத்திலிருந்து கொங்கு மண்டல மக்கள் அதிமுகவிற்கு பெரிய ஆதரவு கொடுத்து வந்தனர். 
 
ஆட்சிக்கட்டிலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்காக இயக்கத்தினர் உழைந்தார்கள். தொண்டர்களால் தான் இந்த இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். உண்மை தொண்டர்களின் உறுதுணையுடன் மீண்டும் அதிமுகவின் ஆட்சி அமைத்து தமிழக மக்களை காத்திடுவேன். இது உறுதி என பேசினார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

சங்கி என்றால் நண்பன் அல்லது தோழன் என்று அர்த்தம்: சீமான் விளக்கம்

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments