Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலா தலைமை பேரழிவாக முடியும்: மூத்த பத்திரிகையாளர்!

சசிகலா தலைமை பேரழிவாக முடியும்: மூத்த பத்திரிகையாளர்!

சசிகலா தலைமை பேரழிவாக முடியும்: மூத்த பத்திரிகையாளர்!
, வெள்ளி, 9 டிசம்பர் 2016 (08:54 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி அதிமுகவின் தலைமையை ஏற்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது குறித்து பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்த மூத்த பத்திரிகையாளர் என்.ராம் அது பேரழிவானது என கூறினார்.


 
 
பிபிசி தமிழில் மூத்த பத்திரிகையாளர் என்.ராம் அளித்த பேட்டி:-
 
இனிமேல் கூட்டுத் தலைமை மூலம்தான் அதிமுக கட்சியை முன்னெடுத்துச் செல்ல முடியும். சமமான அந்தஸ்து உள்ளவர்கள் வரிசையில் ஓபிஎஸ் முதன்மையாக இருக்கிறார் என்ற நிலையில் அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
 
ஆனால், ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை அடைய நினைத்தால் எதிர்ப்பு இருக்கும். அதனால், தவறான திசையில் சென்று, அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால் கட்டாயமாக அந்தக் கட்சி பலவீனமாகிவிடும். எல்லா தரப்பினரும் சசிகலா தலைமையை ஏற்க மாட்டார்கள்.
 
தனக்குத் தாய் இல்லாத குறையைப் போக்கும் வகையில், சசிகலா தன்னை ஒரு சகோதரியாகப் பார்த்துக் கொள்கிறார் என்று பலமுறை ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். ஆனால், அரசியலில் எந்தப் பங்கும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
 
கட்சியில் சாதாரண உறுப்பினர் பதவியிலிருந்து கூட இரண்டு முறை நீக்கப்பட்டு, மன்னிப்புக் கோரிய பிறகு சசிகலாவை சேர்த்துக் கொண்டார். அதுவும், தன் குடும்பத்துடன் எந்தத் தொடர்பும் வைத்து கொள்ள மாட்டேன் என்றும் உறுதியளித்திருந்தார்.
 
சசிகலாவுக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் இருந்தாலும், அதை நம்பி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால், அது பேரழிவான ஓர் ஏற்பாடாக முடியும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மின்னணு முறையில் பணம் செலுத்தினால் அதிரடி சலுகை