Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுரை ஆதினம் மறைவு… அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Advertiesment
மதுரை ஆதினம் மறைவு… அரசியல் தலைவர்கள் இரங்கல்!
, சனி, 14 ஆகஸ்ட் 2021 (10:13 IST)
மதுரை ஆதினம் அருணகிரிநாதரின் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மதுரை ஆதினத்தின் 292 ஆவது மடாதிபதியான அருணகிரிநாதர் தற்போது சுவாசப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தமிழகத்தின் மிக தொன்மையான சைவசமய மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியான குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் அடைந்தேன். சன்னிதானம் அவர்கள் ஆன்மீகத்தோடு அரசியலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதும் என் மீதும் அவர்கள் காட்டிய அன்பு என்றைக்கும் மறக்க முடியாது.சன்னிதானம் அவர்களை இழந்து வாடும் அனைத்து சைவ சமய ஆன்மீக அன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் படுக்கைகளுக்கு கடும் தட்டுப்பாடு