சசிகலாவில் உடல்நலம் எவ்வாறு இருக்கிறது என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் அவர் வரும் 27 ஆம் தேதி தண்டனை முடிந்து விடுதலையாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்தன.
இதனிடையே திடீரென சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். தற்போது அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். மேலும் அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள விக்டோரியா அரசு மருத்துவமனை, சசிகலாவுக்கு ஆக்ஸிஜன் அளவு சீராக உள்ளது. நேற்று வரை 10 லிட்டர் அழுத்தம் கொண்ட ஆக்ஸிஐன் செலுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று 5 லிட்டர் அழுத்தம் கொண்ட ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது.
தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சசிகலா தானாக உணவு உட்கொள்கிறார். கொரோனாவிற்கான அறிகுறிகள் குறைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.