அனைத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவும் தனக்கே உள்ளது என்ற சசிகலா கூறிவந்தார். ஆனால், இதுவரை 6 எம்.எல்.ஏக்கள் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் பக்கம் சென்றுவிட்டனர்.
மேலும், அதிமுக எம்.எல்.ஏக்களை வலுக்கட்டாயமாக, கூவத்தூரில் உள்ள விடுதியில் சிறை வைத்துள்ளனர் என்ற செய்தி பரவியது. அந்நிலையில், நேற்று கோவத்தூருக்கு சென்ற சசிகலாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், நீங்களே எண்ணிப் பார்துக் கொள்ளுங்கள். எல்லோரும் இங்கேதான் இருக்கிறார்கள் என பதிலளித்தார்.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் “ சசிகலாவுடன் எம்.எல்.ஏக்கள் இருக்கும் புகைப்படத்தை பார்த்தேன். அதில் 89 பேர்தான் இருக்கிறார்கள். நான் எண்ணிப் பார்த்து விட்டேன். சந்தேகம் இருந்தால் நீங்களும் எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்...
அடைத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் பதிலளித்தார்.