Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழனிச்சாமி வெற்றி - ரஜினி ஸ்டலியில் ‘மகிழ்ச்சி’ கூறிய சசிகலா

Advertiesment
பழனிச்சாமி வெற்றி - ரஜினி ஸ்டலியில் ‘மகிழ்ச்சி’ கூறிய சசிகலா
, சனி, 18 பிப்ரவரி 2017 (18:57 IST)
சசிகலா தரப்பில் தமிழக முதல்வராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியவுடன், அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவே முதலமைச்சராக முன்மொழியப்பட்டார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கு அவருக்கு பாதகமாக அமையவே, அந்த இடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்தார் சசிகலா. தற்போது பெங்களூர் சிறையில் இருக்கிறார் சசிகலா.
 
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை முதல் சட்டசபையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும், சிறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொல்லிக் கொண்டே இருந்தார்களாம். இறுதியில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார் என்ற செய்தியை கூறிய போது, சசிகலா கபாலி ரஜினி ஸ்டைலில் “மகிழ்ச்சி” என்ற வார்த்தையைல் தனது சந்தோஷத்தை வெளிப்படித்தியதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடியின் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது - சேடப்பட்டி முத்தையா பேட்டி