கொடநாட்டில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுனராக பணி புரிந்த திவாகர் என்பவர் சசிகலா குறித்து பல்வேறு தகவல்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்கும் கொடநாட்டில் அவருக்கு கார் டிரைவராக பணியாற்றிய திவாகர்(42) என்பவர், என்பது ஜெ.வின் மர்ம மரணம் குறித்து சில பகீர் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2005ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை ஜெயலலிதா கொடநாட்டிற்கு வரும் போது, அவருடைய வாகனத்திற்கு முன் வரும் பாதுகாப்பு வாகனத்தை நான் ஓட்டுவேன்.
அங்குள்ள அனைவரிடமும் ஜெயலலிதா அன்பாக பழகுவார். ஆனால், சசிகலாவை பார்த்தாலே எல்லோரும் நடுங்குவார்கள். யாரிடமாவது ஜெ. அன்பாக பேசுவது தெரிந்தாலோ, அவர்களின் கோரிக்கையை ஜெ. நிறைவேற்றுகிறேன் என கூறியது தெரிந்தாலோ, அவர்கள் உடனே எஸ்டேட்டிலிருந்து சசிகலா வெளியேற்றி விடுவார்.
எனக்கு தெரிந்து நான்கு பேரை அடித்தே வெளியே அனுப்பினார்கள். இந்த வயதில் ஜெ. மரணம் அடைவதற்கு வாய்ப்பில்லை. அவருக்கு என்ன நடந்தது என்பது சசிகலா குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும். அவர்கள் சட்டத்திலிருந்து தப்பலாம், ஆனால் கடவுளிடமிருந்து தப்ப முடியாது” என அவர் ஆதங்கமாக பேசியுள்ளார்.