Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இது என்ன புது கணக்கா இருக்கு? சசிகலா சொன்ன கால்குலேஷன்!

இது என்ன புது கணக்கா இருக்கு? சசிகலா சொன்ன கால்குலேஷன்!
, திங்கள், 29 ஜூன் 2020 (13:32 IST)
பணமதிப்பிழப்பின் போது 48 லட்சம் ரூபாய் அளவுக்கே தன்னிடம் பணம் இருந்ததாக சசிகலா வருமான வரித்துறைக்கு பதில். 
 
அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா மீது சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா மற்றும் அவரது உறவினர்களான இளவரசி, சுதாகர் ஆகியோர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை சாலையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். 
 
இவர்களது தண்டனை காலம் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. ஆனால் நன்னடத்தை மற்றும் சுதந்திர தினம் காரணமாக அவர் 6 மாதம் முன்கூட்டியே விடுதலையாகலாம் என்ற செய்தி நேற்று இரவு சமூகவலைதளத்தில் பகிரப்பட்டது. ஆனால் அந்த செய்தி உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. 
 
இந்நிலையில் அவர் வாங்கி குவித்த சொத்துக்கள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா பல்வேறு சொத்துகள் வாங்கியுள்ளது தெளிவாகியுள்ளது. 
webdunia
இரண்டு ஷாப்பிங் மால்கள், ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம், சர்க்கரை ஆலை, காகித ஆலை மற்றும் ஒரு ரிசார்ட் என பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களை சசிகலா வாங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டது. 1654 கோடி ரூபாய் அளவுக்கு அசையா சொத்துக்கள் வாங்கியதாகவும், 237 கோடி ரூபாய் கடனாக அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 
 
இது குறித்து சசிகலா தெரிவித்துள்ளதாவது, பணமதிப்பிழப்பின் போது 48 லட்சம் ரூபாய் அளவுக்கே தன்னிடம் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்ததாக, வருமான வரித்துறையிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாத்தான்குளம் சம்பவம்; விசாரணைக்கு ஒத்துழைக்காத காவலர்கள்! – கோர்ட் எடுத்த அதிரடி முடிவு!