Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலாவை பரோலில் எடுக்க குடும்பத்தினர் தீவிரம்!

சசிகலாவை பரோலில் எடுக்க குடும்பத்தினர் தீவிரம்!

சசிகலாவை பரோலில் எடுக்க குடும்பத்தினர் தீவிரம்!
, வியாழன், 15 ஜூன் 2017 (10:34 IST)
அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறைக்கு சென்றதில் இருந்து இதுவரை பரோலில் வரவில்லை.


 
 
சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மரணத்துக்கும் சசிகலா வரவில்லை. இந்நிலையில் தினகரன் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தபின்னர் சசிகலாவை சந்திக்க பெங்களூர் சிறைக்கு சென்றார். அன்றைய தினம் சசிகலா பரோலில் வர இருப்பதாக செய்திகள் வந்தது. ஆனால் அவர் வரவில்லை. இப்படி பலமுறை சசிகலா பரோலில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் வரவில்லை.
 
இந்நிலையில் தற்போது சசிகலாவை பரோலில் எடுக்க அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வருகிறது. திவாகரன் மகன் ஜெய் ஆனந்தின் கல்யாண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
 
இந்த திருமணத்துக்கு தினகரன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட குடும்பத்தில் உள்ளவர்கள் மன வருத்தங்களை களைந்து மீண்டும் உறவை புதுப்பிக்க உள்ள விழாவாக இதனை பார்க்கின்றனர். இதனால் இதற்கு கண்டிப்பாக சசிகலா வர வேண்டும் என திவாகரன் உறுதியாக உள்ளார்.
 
இதனையடுத்து டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞர்கள் சிலருடன் இது தொடர்பாக ஆலோசனையும் நடந்தியுள்ளார். ஜெய் ஆனந்த் திருமண விழாவுக்கு சசிகலா பரோலில் நிச்சயம் வருவார் என்று மன்னார்குடி வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்ஐசி-யின் புதிய ஓய்வூதிய திட்டத்தை பற்றி தெரியுமா?