தைரியம் இல்லாத சசிகலா?: திமுகவின் பெயரை சொல்ல கூட பயம்!
தைரியம் இல்லாத சசிகலா?: திமுகவின் பெயரை சொல்ல கூட பயம்!
நேற்று மாலை 5 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்று பேசிய சசிகலா சட்டமன்றம் நாடாளுமான்ற உறுப்பினர்களுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும் அவர் தைரியமாக பேசுவதற்கு பயப்படுவதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பேசிய அவர், எதிரான கட்சி நம்மை பிரிக்கவும், அழிக்கவும் சதி செய்கிறார்கள். அது எடுபடாது, எடுபடவும் இடம் கொடுக்க கூடாது. அம்மா என்ன கொள்கையில் இருந்தார்களோ, அந்த கொள்கையை, அம்மாவின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இங்கு எதிரான கட்சி என சசிகலா கூறியது திமுகவை தான் என அனைவருக்கும் தெரிந்தாலும், ஒரு இடத்தில் கூட அவர் திமுக என்று குறிப்பிடவில்லை. இதற்கு முன்னர் சசிகலா பொதுச்செயலாளராக பதவியேற்றபோது கூட நமது அரசியல் எதிரிகள் என்று தான் கூறினார். மாறாக திமுக போன்ற கட்சிகளின் பெயரை கூறுவதை தவிர்த்துவிட்டார்.
ஆனால், இதே நேரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் தைரியமாக திமுக என்று குறிப்பிட்டு பேசியிருப்பார் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களே பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.