நமீதாவுக்கு இருக்கும் தகுதி கூட சசிகலாவுக்கு இல்லை: அதிர்ச்சி ரிப்போர்ட்!
நமீதாவுக்கு இருக்கும் தகுதி கூட சசிகலாவுக்கு இல்லை: அதிர்ச்சி ரிப்போர்ட்!
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தான் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தொடந்து கூறிவருகின்றனர். தினமும் ஒவ்வொரு காட்சிகள் அரங்கேறுகின்றன. இன்னொரு பக்கம் பாஜக அதிமுகவை உடைக்க பார்க்கிறது என்ற குற்றச்சாட்டும் வருகிறது.
சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆவாதை மேலிடம் விரும்பவில்லை என பல செய்திகள் வருகின்றன. மேலும் சசிகலா மற்றும் அதிமுகவில் நடக்கும் ஒவ்வொரு மூவ்வையும் டெல்லி தரப்பு கவனித்து வருவதாகவும் இண்டலிஜென்ஸ் பியூரோ எனப்படும் ஐபி மூலம் அவர்கள் தமிழக நிலவரங்களை தெரிந்துகொள்வதாக கூறப்படுகிறது.
அவர்கள் கொடுத்த ரிப்போர்ட்டில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் செயற்குழுவை கூட்டினார் ஜெயலலிதா. அதில் சசிகலா பெயர் இடம்பெறவில்லை. அவர் செயற்குழு உறுப்பினராக இல்லை என்பதற்கான அனைத்து ஆவனங்களும் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சசிகலாவுக்கு அதிமுக உறுப்பினர் அட்டையே கிடையாதாம். சமீபத்தில் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நடிகை நமீதாவிடம் கூட அதிமுக அடையாள அட்டை உள்ளது என அந்த ரிப்போர்ட் சொல்கிறது. அதிமுக உறுப்பினர் அட்டை கூட ஜெயலலிதா சசிகலாவுக்கு வழங்காத நிலையில் அவரை தற்போது அம்மாவின் வாரிசு, அவர்தான் அதிமுக பொதுச்செயலாளர் அதிமுகவினர் கூறுவது டெல்லி மேலிடத்தில் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.