Publish Date: Wed, 02 Feb 2022 (15:04 IST)
Updated Date: Wed, 02 Feb 2022 (15:23 IST)
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து சசிகலா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கான புதிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளும் வெளியாகிய நிலையில், மக்களுக்கு தேவையான முறையான அறிவிப்புகள் இல்லை என எதிர்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து சசிகலா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சாதகங்களும் பாதகங்களும் நிறைந்த கலவையானதொரு நிதிநிலை அறிக்கையாகும். 60 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், டிசம்பர் வரை 1.7 கோடி பெண்கள் உட்பட 5.3 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற வேண்டியுள்ளதாக ஒரு ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்று அறிவித்திருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது எனவும் சசிகலா தெரிவித்துள்ளார்.