சசிகலா ஒரு பெண் தாதா: குண்டர்களை வைத்து மிரட்டுகிறார்!
சசிகலா ஒரு பெண் தாதா: குண்டர்களை வைத்து மிரட்டுகிறார்!
அதிமுக எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் குண்டர்களை வைத்து அடைத்து வைத்திருக்கும் சசிகலா ஒரு பெண் தாதா என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் பேசி வரும் நிலையில் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சசிகலாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இளங்கோவன், கூவத்தூர் ரிசார்ட்டில் 90 எம்எல்ஏக்களை அடைத்து வைத்து குண்டர்களை விட்டு மிரட்டுகிறார். பத்திரிகையாளர்களை மிரட்டுகிறார்.
செல்போன்களைப் பிடுங்கிச் செல்வது, கேமராக்களை எட்டி உதைப்பது, முதல்வர் பன்னீர்செல்வம் சிரிப்பதைப் போல அசிங்கமாக நடித்துக் காட்டுவது, பேசுகிற தோரணையே மிரட்டுவது போல உள்ளது. சசிகலா ஒரு பெண் தாதாவாகவே மாறி விட்டார் என கூறினார்.
மேலும் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை நாங்கள் சசிகலாவுக்கும் ஆதரவில்லை, ஓபிஎஸுக்கும் ஆதரவில்லை. திருநாவுக்கரசர் சொல்வதெல்லாம் அவரது சொந்த கருத்து, அது கட்சியின் கருத்து இல்லை என கூறினார்.