Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சசிகலா முதலமைச்சர் ஆகியே ஆக வேண்டும்' - அதிமுக அமைச்சர் அதிரடி

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2016 (15:56 IST)
ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு சசிகலா முதல்மைச்சராக வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.


 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை அவரது தோழி சசிகலா ஏற்க வேண்டும் என்று அதிமுக தரப்பினர் கூறி வருகின்றனர். இதற்கு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதா பேரவை செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் இன்று ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய பின் பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பதுடன் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்த ஆர்.கே. நகர் தொகுதியில்    இடைத்தேர்தல் நடைபெறும்போது அதில் போட்டியிட்டு சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், “புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் சின்ன அம்மா சசிகலா. அவர் தியாகத்தின் வடிவமாக திகழ்ந்தார். ஒரு கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக சசிகலா விளங்குகிறார்.

அவர் அதிமுக பொதுச் செயலாளர் பதவி ஏற்று கட்சியை வழி நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி சின்ன அம்மா சசிகலா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்று முதலமைச்சராகவும் ஆக வேண்டும்” என்று கூறியுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments