நடராஜன் கவலைக்கிடம் - பரோலில் வெளி வருகிறார் சசிகலா?
						
		
			      
	  
	
			
			  
	  
      
								
			
				    		 , புதன்,  27 செப்டம்பர் 2017 (08:54 IST)
	    	       
      
      
		
										
								
																	தனது கணவர் நடராஜன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதால், அவரை சந்திப்பதற்காக பரோலில் வெளிவர சசிகலா  விண்ணப்பித்துள்ளார்.
 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
								
																	
		சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் பாகங்கள் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.
		 
		அதோடு அவருக்கு சமீபத்தில் நுரையீரல் அடைப்பும் ஏற்பட்டது. எனவே, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது.
		தற்போது அவரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, அவரை மருத்துவமனையில் வந்து சந்திப்பதற்காக, சிறையில் உள்ள சசிகலா, பரோலில் வெளிவர அனுமதி கேட்டு தாக்கல் செய்துள்ளார்.
		 
		அவருக்கு பரோல் கிடைக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல், தமிழக அரசியல் பரபரப்பாக உள்ள இந்த நிலையில் அவர் வெளியே வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
 
	    
  
	
 
	
				       
      	  
	  		
		
			
			  அடுத்த கட்டுரையில்
			  