Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலாவும் அப்பல்லோவும் சேர்ந்து நடத்திய நாடகம்?: கடைசி வரை மர்மமே! (வீடியோ இணைப்பு)

சசிகலாவும் அப்பல்லோவும் சேர்ந்து நடத்திய நாடகம்?: கடைசி வரை மர்மமே! (வீடியோ இணைப்பு)

சசிகலாவும் அப்பல்லோவும் சேர்ந்து நடத்திய நாடகம்?: கடைசி வரை மர்மமே! (வீடியோ இணைப்பு)
, வியாழன், 22 டிசம்பர் 2016 (14:42 IST)
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதா உடல் நலம் சரியாகி விட்டார், உணவு சாப்பிட்டார், பேசினார், பந்து விளையாடினார் என பல தகவல்கள் வந்தன.


 
 
ஜெயலலிதா அவ்வப்போது தான் செயற்கை சுவாசம் எடுத்துக்கொள்கிறார். அவர் பூரண குணமடைந்துவிட்டார். அவர் விரும்பும் நேரத்தில் வீட்டிற்கு செல்லலாம் என அப்பல்லோ மருத்துவமனை கூறி வந்தது.
 
இடைத்தேர்தலின் போது நான் மறுபிறவி எடுத்துள்ளேன் என அறிக்கை வெளியிட்டது. கைரேகை வைக்கப்பட்டது. சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார் என கூறியது எல்லாம் நடந்தது. ஆனால் இவையெல்லாம் சசிகலாவும் அப்பல்லோ மருத்துவமனையும் இணைந்து நடத்திய நாடகம் என்பது போல பிரபல தமிழ் வார இதழான விகடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
அதாவது ஜெயலலிதா உடல்நிலை மோசமாகி எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமலே அப்பல்லோவில் நாட்கள் கடந்தோடிவிட்டன. இப்படியே வைத்திருப்பது நல்லதல்ல என மருத்துவமனை நிர்வாகம் சசிகலாவிடம் கூற, அதன் பின்னர் தான் ஜெயலலிதா சாதரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். விரும்பும் நேரத்தில் வீட்டுக்கு செல்வார் என மருத்துவமனையை கூறவைத்துள்ளார் சசிகலா.

 

நன்றி: விகடன்
 
அப்படி இருக்கும் போது தான் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு வந்து எக்மோ கருவிகள் பொறுத்தப்பட்டும் அவருக்கு பலனளிக்காமல் உயிரிழந்தார் என அந்த வீடியோவில் விகடன் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார், சாதரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார், பேசினார் போன்ற தகவல்கள் சசிகலாவும் அப்பல்லோ மருத்துவமனையும் சேர்ந்து நடத்திய நாடகம் என்பது அந்த வீடியோ மூலம் தெரிகிறது. கடைசி வரைக்கும் ஜெயலலிதா மரணத்தில் அப்பல்லோவில் நடந்தது மர்மமாகவே நீடிக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புழல் சிறையில் முதல் வகுப்பு கேட்டு சேகர் ரெட்டி மனு