மு.க.ஸ்டாலின் பழிவாங்கும் உணர்ச்சியில் பேசுகிறார்! – சரத்குமார்

சனி, 19 அக்டோபர் 2019 (17:28 IST)
திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள் என மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது பழிவாங்கும் உணர்ச்சியின் வெளிப்பாடு என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தொகுதிகளான நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் “திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். திமுக ஆட்சிக்கு வரும்போது அதிமுக அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள்” என்று பேசியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ”அதிமுக அனைத்து தொகுதிகளிலும் பெருவாரியான வெற்றி பெறும். மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள் என பேசியிருப்பது அவரது பழிவாங்கும் உணர்ச்சியின் வெளிப்பாடாக தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

ஆனால் சிலர் தவறு செய்த, ஊழல் செய்த அமைச்சர்களை கைது செய்யப்போவதாக ஸ்டாலின் பேசியதாகவும், அதை சிலர் திரித்து கூறிவிட்டதாகவும் பேசி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் Tik Tok -க்கு போட்டியாக அறிமுகமாகும் Edu Tok .. இனி பசங்கள கையில் புடிக்க முடியாது!