Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டாலின் செய்ததும் தவறுதான். சரத்குமார்

Advertiesment
ஸ்டாலின் செய்ததும் தவறுதான். சரத்குமார்
, ஞாயிறு, 19 பிப்ரவரி 2017 (07:09 IST)
தமிழக சட்டசபை நேற்று நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூடியபோது திமுக உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்புதான் நடத்த வேண்டும் என்று உறுதியான கோரிக்கையை வைத்தனர். ஆனால் சபாநாயகர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை




இதனால் சட்டசபையில் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் கையை பிடித்து இழுப்பது, சபாநாயகர் நாற்காலியில் உட்காருவது என திமுக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சட்டசபை மாண்பு குலைக்கப்பட்டதாக அனைத்து கட்சி தலைவர்களும் கருத்து கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் இதுகுறித்து கூறுகையில், 'சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, சபாநாயகரை தாக்கி அவரது இருக்கையில் திமுக உறுப்பினர்கள் அமர்ந்ததும் தவறுதான் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேராசையும் கோழைத்தனமும் வஞ்சித்துவிட்டது. நடிகை கவுதமி