Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வழக்கறிஞரின் மூக்கை உடைத்த சந்தானம்: கைது செய்ய வலியுறுத்தும் பாஜக

, செவ்வாய், 10 அக்டோபர் 2017 (10:28 IST)
நகைச்சுவை நடிகராக இருந்த ஹீரோவாக புரமோஷன் அடைந்த சந்தானம், கொடுக்கல் வாங்கல் தகராறு ஒன்றில் பாஜக பிரமுகர் மற்றும் வழக்கறிஞரை தாக்கியதால் வழக்கறிஞரின் மூக்கு உடைந்தது. இதுகுறித்து செய்யப்பட்டுள்ள புகார் காரணமாக சந்தானத்தை கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் வற்புறுத்தி வருகின்றனர்.



 
 
வளசரவாக்கத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் திருமணம் மண்டபம் கட்டுவதற்காக ரூ.3 கோடி முன்பணம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் பணத்தை வாங்கிவிட்டு அந்த நிறுவனம் கட்டிடம் கட்ட காலதாமதம் ஆகிவிட்டதாக தெரிகிறது. இதனால் சந்தானம் பணத்தை திருப்பி கேட்டபோது பணத்தை தர அந்த நிறுவனம் மறுத்துள்ளது.
 
இதுகுறித்து நேற்று நியாயம் கேட்க போனதோடு நிறுவனத்தின் உரிமையாளர் சண்முகசுந்தரம் என்பவருக்கும் சந்தானத்திற்கும் முதலில் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கலகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது குறுக்கே வந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவரையும் சந்தானம் தாக்கியதாக தெரிகிறது. இதில் வழக்கறிஞரின் மூக்கு உடைந்தது.
 
இதுகுறித்து இருதரப்பினர்களும் புகார் கொடுத்துள்ளதாகவும் இருவர் மீது போலீஸ் தரப்பு வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஆக்சன் ஹீரோவாக மாறிய சந்தானம் நிஜத்திலும் ஆக்சனில் இறங்கியது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா தொலைப்பேசியில் அழைத்தால்? - அமைச்சர்களுக்கு ஐடியா கொடுத்த எடப்பாடி